வானிலை ஆய்வு மையம்  சில மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு செந்தாமரை கண்ணன் கூறியது  வட இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக நவம்பர் ஒன்றாம் தேதி இன்று திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் மாவட்டங்களில் கனமழையும் சென்னை செங்கல்பட்டு திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் அரியலூர் பெரம்பலூர் தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி நாமக்கல் போன்ற மாவட்டங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது  என்றார்.சென்னை புற நகர்ப்பகுதிகளில் நேற்று மாலை முதல் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்க கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு அதிகாரிகள் தலைமையில் முன்னேற்பட்ட குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு ஆர் பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Share to All

0 comments:

 
Top