தமிழ்ப்பேராய விருதுகளை எஸ்.ஆர்,எம் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து,தமிழ்ப்பேராயம் தலைவர் பொன்னவைக்கோ சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.


இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்,தமிழ்ப்போராயம் என்ற அமைப்பினை தொடங்கி தமிழ்,மொழி,இலக்கியம்.கலை,ஆய்வு ஆகியவற்றின்
வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.இணையவழியிலான தமிழ் உயர்கல்வி,தமிழ்ச்சமயக்கல்வி.கணினித் தமிழ்க் கல்வி.அரிய நூல்கள் பதிப்புப் பணி ஆகியவற்றுடன்,தமிழ்ப் படைப்பாளிகள்,திறனாய்வாளர்கள்,சாதனைகள் புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.19 இலட்சம்,பெறுமான புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது,பாராதியார் கவிதை,அழ.வள்ளியப்பா குழந்தை விருது என 10 வகையான விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு நீதிபதி மோகன் தலைமையில் குழு அமைக்கபட்டு இந்த ஆண்டுக்காக விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பச்சமுத்து பைந்தமிழ் விருது அண்ணாமலை பல்கலைக்கழக போராசியர் செ.வை.சண்முகத்திற்கு ரூ 5 லட்சம் விருதும்.பரிதிமாற் கலைஞர் விருது இளங்குமரனாருக்கு ரூ 2 ,லட்சம் விருது வரும் 24 தேதி வேந்தர் பச்சமுத்து பிறந்தநாளில் எஸ்,ஆர்,எம்,பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது .
மற்ற விருதுகளுக்கு தேர்வு செய்யபட்டவர்களுக்கு விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
விழாவில் நீதிபதி இலட்சுமணன்.எஸ்,ஆர்,எம்,பல்கலைக்கழக கல்விக்குழும தலைவர் இரவி.பதிவாளர் சேதுராமன்,உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

மற்ற அனைத்து விருதுகளை காட்டிலும் உண்மையான விருது தமிழ் அறிஞர்களுக்கு முறையாக தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது, இவ்வாறு கூறினார்கள்


Share to All

0 comments:

 
Top